உதவி நடன இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய விஷ்வாந்த், 2010 ஆம் ஆண்டு வெளியான ‘வெளுத்துக்கட்டு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ’தோனி’, ‘தடையற தாக்க’, ‘அட்டக் கத்தி’ ஆகியப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு ரஜினியின் ‘கபாலி’ படம் திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்திலும் சிறு வேடம் ஒன்றில் நடித்தாலும், ரஜினிகாந்துடன் அவர் வரும் காட்சிகள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
அப்படத்தை தொடர்ந்து ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’, ‘ஸ்கெட்ச்’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த விஷ்வாந்துக்கு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் விஷ்வாந்த் நடித்து வருகிறார்.
தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கும் விஷ்வாந்த் ரஜினிகாந்தை சந்தித்த போது, கபாலி படத்தில் அவர் நடித்த கதாப்பாத்திரம் குறித்து நினைவுக்கூர்ந்த ரஜினிகாந்த், அவரது நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், ‘கபாலி’ யை காட்டிலும் ‘அண்ணாத்த’ படத்தில் விஷ்வாந்துக்கு கொடுக்கப்பட்ட வேடம் பெரிய வேடம் என்றும், இதிலும் சிறப்பாக நடிக்க வேண்டும், என்று ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.
அதேபோல், இயக்குநர் சிவாவும், கபாலி படத்தில் விஷ்வாந்தின் நடிப்பு தனக்கு பிடித்ததால் தான், இந்த வேடத்திலும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்ததாக கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘கபாலி’ விஷ்வாந்த் என்று ரசிகர்களால் அறியப்பட்ட விஷ்வாந்த், ‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு ‘அண்ணாத்த’ விஷ்வாந்த் என்று அழைக்கும் அளவுக்கு அவர் வேடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஊரடங்கிற்குப் பிறகு தான் பங்கேற்கும் முதல் படப்பிடிப்பிலேயே ரஜினிகாந்த், இயக்குநர் சிவா போன்ற ஜாம்பவான்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் கிடைத்திருப்பதால் விஷ்வாந்த் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...