பிக் பாஸ் சீசன் 3 மூலம் மீண்டும் பிரபலமடைந்த நடிகை வனிதா விஜயகுமார், தனது மூன்றாவது திருமணம் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவதாக அவர் திருமணம் செய்துக் கொள்ள, அதற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே, சர்ச்சைகளை கடந்து பீட்டர் பாலுடன் சந்தோஷமாக வாழ தொடங்கிய வனிதா சில நாட்களிலேயே அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் விட்டு பிரிந்தார். பிறகு, தனது யுடியுப் சேனலில் வீடியோ போடுவதில் கவனம் செலுத்தியவர், தனது மூன்றாவது திருமண தோல்வியின் காரணத்தை, அவருடைய சேனலில் வெளியிட்டு பணம் பார்க்க தொடங்கினார்.
இந்த நிலையில், வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக பதிவு வெளியிட்டுள்ளார். ஆனால், யாரிடம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
பொருத்திருந்து பார்ப்போம், அவரது 4 வது கணவர் யார்? என்று.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...