அமலா பால் நடிப்பில் வெளியான ஆபாசப்படமான ‘சிந்து சமவெளி’ மூலம் நடிகரானவர் ஹரிஷ் கல்யாண். அப்படத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பே எட்டா கனியாகவிட்டது. ஒரு கட்டத்தில் ஹரிஷின் சினிமா வாழ்க்கையே அஸ்தமனாகிவிடும் சூழலில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஹரிஷ் கல்யாணின் முகம் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாக, அதன் மூலம் அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன்படி, கிடைத்த ‘பியார் பிரேமா காதல்’ படம் வெற்றியடைந்ததால், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதோடு, அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தாராளபிரபு’ படம் நல்ல வரவேற்பு பெற, அதனால் ஹரிஷ் கல்யாணின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதாம்.
காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது தவறல்ல என்றாலும், அந்த மாறுதலால் மற்றவர்கள் பாதிப்படையக் கூடாது. ஆனால், ஹரிஷ் கல்யாணிடம் ஏற்பட்ட மாறுதல்களால் அவரை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர்களும், அவரிடம் கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களுடம் கதறுகிறார்களாம்.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ், தான் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாணை ஹீரோவாக முயற்சித்த போது, கேட்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு சம்பளம் கேட்ட ஹரிஷ், “இப்போ என் ரேஞ்சே வேற” என்றும் கூறிவிட்டாராம்.
ராஜேஷிடம் மட்டும் அல்ல, ஹரிஷ் தற்போது நடித்து வரும் பட இயக்குநர்களிடமும் “இப்போ என் ரேஞ்சே வேற” அதனால் அதற்கு ஏற்றவாறு காட்சிகள் வைங்க, என்று அடிக்கடி கூறி அவர்களை கதற விடுகிறாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...