Latest News :

அரசியல் கட்சி அறிவித்த திடீர் சலுகை! - உற்சாகத்தில் நடிகர்கள்
Saturday December-19 2020

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் வீயூகங்கள் அமைக்க தொடங்கியிருப்பதோடு, விளம்பர பணிகளையும் தொடங்கியிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே மிக முக்கியமான தேர்தலாக 2021 ஆம் ஆண்டு தேர்தல் இருக்கப் போகிறது. காரணம், தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இந்த தேர்தலில் களம் காணப்போகிறார்கள்.

 

இதற்கிடையே, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக பல்வேறு விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனிதனியாக தங்களை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காக ஆன்லைன் மீடியாக்களில் அவர்கள் தங்களைப் பற்றி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள். 

 

திமுக-வும் தங்களது பங்கிற்கு கார்ப்பரேட் இடைத்தரகர் மூலம் தேர்தல் பணிகளை முடக்கி விட்டிருப்பதோடு, ஆன்லைன் மற்றும் இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வெளுத்து வாங்குகிறார்கள்.

 

இந்த நிலையில், அதிமுக சார்பில் நடிகர், நடிகைகளுக்கு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று உலா வருகிறது. அதாவது, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அதிமுக-வில் இருந்து அழைப்பு ஒன்று வருகிறதாம். அதன்படி, அதிமுக-வில் இணைந்தால் அவர்களுக்கு ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்கப்படுமாம். அதில், மானியமாக ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதமுள்ள ரூ.2 லட்சத்தை மட்டும் திரும்ப செலுத்தினால் போதும், என்று கூறப்படுகிறதாம்.

 

இப்படி ஒரு அழைப்பினால், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் குஷியடைந்திருப்பதோடு, அதிமுக-வில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த தகவல் உண்மையாக இருந்தால் திரைத்துறையினருக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் ஜாக்பாட் தான்.

Related News

7140

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery