சிம்பு என்றாலே வம்பு என்ற இமேஜை, உடைக்கும் விதமாக சிலம்பரசன் குட் பாயாக வலம் வர தொடங்கியுள்ளார். மேலும், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளை விரைவாக முடித்துக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டி வருபவரின் இந்த மாற்றம் அவருடைய ரசிகர்களை மட்டும் இன்றி குடும்பத்தாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்த சிம்பு தனது வம்புத்தனத்தை மீண்டும் காட்ட தொடங்கியிருப்பதாகவும், அதனால் அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் பெரும் கவலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க, இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்துக் கொடுத்த சிம்பு, பின்னணி வேலைகளிலும் படு வேகத்தை காட்டினார். இதனால், படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், வரும் ஜனவரி 13 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக ரூ.4 கோடி சம்பளம் பெற்ற சிம்பு, தற்போது மேலும் சில கோடிகளை சம்பளமாக கேட்டு முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது. பேசிய சம்பளத்தில் ஐந்து பைசா கூட பாக்கி வைக்காமல் சிம்புவுக்கு கொடுத்த தயாரிப்பாளர், சிம்பு கூடுதல் தொகை கேட்பதால் கவலையில் உள்ளாராம்.
அதே சமயம், ‘ஈஸ்வரன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ.7.10 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிம்பு படம் என்றால் தொலைக்காட்சி உரிமம் மட்டும் ரூ.4 கோடி வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. இன்னும் இதர மாநில உரிமை, டிஜிட்டல் உரிமை என்று தயாரிப்பாளருக்கு பல வகையில் வருமானம் வரும் என்பதால், சிம்பு கூடுதல் சம்பளம் கேட்பதில் தவறில்லை என்றும் கூறுகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...