பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான நடிகை வனிதா தனது நான்காவது திருமணத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கியதோடு, பட்டிதொட்டியெங்கும் பரவ தொடங்கி விட்டார். தற்போது பிரபலங்கள் தொடங்கும் யூடியுப் சேனலுக்கு கண்டண்ட் கொடுப்பவராக திகழ்பவர், அதற்காக கட்டணமாக சில ஆயிரங்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பேட்டி கொடுக்கவும் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, தனது நான்காவது கணவரிடம் இருந்து பிரிந்த வனிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் காதல் வயப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து வனிதாவின் ஐந்தாவது காதலர் யார்? என்று நெட்டிசன்கள் தேட தொடங்கிய நிலையில், வனிதாவின் ஐந்தாவது காதல் ரகசியம் உடைந்திருக்கிறது.
வனிதா இன்னும் ஐந்தாவது காதலில் கமிட் ஆகவில்லை. அவர் அப்படி போட்டதற்கு காரணம் நடிகை உமா ரியாஸ் தான். அவர் நடத்தும் யூடியுப் சேனலில் வனிதாவை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்திய உமா ரியாஸ், வனிதாவிடம் ”பீட்டர் பாலை பிரிந்த நீ மீண்டும் கமிட் ஆகிவிட்டதாக சோசியல் மீடியாவில் போஸ்ட் போட முடியுமா?” என்று கேட்க, அதற்கு டக்கென்று “நான் கமிட் ஆகிவிட்டதாக” வனிதா பதிவு ஒன்றை போட்டார். அப்படி வந்தது தான் அவரது 5 வது காதல்.
ஆனால், உமா ரியாஸுக்காக ஐந்தாவது காதல் பற்றி பதிவிட்ட வனிதா, ஆள் கிடைத்தால் நிச்சயம் அந்த காதலை வளர்க்கவும் தயாராகவே இருக்கிறார், என்பது அவரது பேச்சில் தெரிகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...