சுந்தர்.சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டால் நிறுவனம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்க இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இப்படத்தில் முதல் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரும் வாள் சண்டை, குதிரை பயிற்சி ஆகியவைகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென்று படத்தில் இருந்து விலகினார்.
ஒரு பக்கம் படத்திற்காக ஐதரபாத்தில் பிரம்மாண்ட செட்களும் போடப்பட்டுவிட்டாலும், சங்கமித்ரா வேடத்தில் நடிகை கிடைக்காததால், படப்பிடிப்பை தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சங்கமித்ரா படத்தை தள்ளிவைத்துள்ள சுந்தர்.சி, அந்த இடைவெளியில் ‘கலகலப்பு-2’ படத்தை இயக்க தொடங்கியுள்ளார். ஜீவா, ஜெய் நடிக்கும் இப்படத்தின் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், சங்கமித்ரா கதாபாத்திரத்திற்காக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது சங்கமித்ரா படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ள குஷ்பு, கலகலப்பு-2 இரண்டு மாதத்தில் முடிந்துவிடும் என்றும், டிசம்பர் மாதம் முதல் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...