Latest News :

சோகத்தில் இருந்த ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
Monday December-28 2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகளை மையப்படுத்திய இத்தொடரில் மூன்று தம்பதிகளாக நடித்திருப்பவர்களில் முல்லை மற்றும் கதிர் என்ற கதாப்பாத்திரங்களில் நடித்த குமரன் மற்றும் சித்ரா ஜோடி தான் ரசிகர்களின் பேவரைட் ஜோடி.

 

இந்த ஜோடியின் ரொமான்ஸ் மற்றும் சிறு சிறு சண்டைகளுக்காகவே இந்த தொடரை பலர் பார்க்கிறார்கள், என்று சொல்லும் அளவு ரசிகர்களிடம் இந்த ஜோடி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்டதால் இந்த தொடரில் நடித்தவர்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் பெரும் சோகத்திற்கு தள்ளப்பட்டனர்.

 

இதற்கிடையே, சித்ரா கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்புகளையும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழுவினர் தொடங்கினாலும், சித்ரா இல்லாது அவர்களுக்கும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களுக்கும் பெரும் சோகமாகவும், ஏமாற்றமும் இருந்து வந்தது.

 

இந்த நிலையில், சித்ரா மறைவால் சோகத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தென்னிந்திய மொழிகள் சிலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது.

 

Pandiyan Stores

 

ஸ்டார் பிளஸ் சேனலில் ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ என்ற தலைப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்தி ரீமேக் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் என்பதால், இந்த செய்தி நிச்சயம் பாண்டியன் ஸ்டோர்க்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்.

Related News

7164

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery