Latest News :

100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
Monday December-28 2020

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்துப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 50 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கி வரும் திரையரங்குகளை, 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது குறித்து இன்று தமிழ்நாடு பிலிம் எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வெளியிட்டனர்.

 

 

கோரிக்கைகள் பின்வருமாறு:

 

பத்திரிகையாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், “திரையரங்குகளில் இதுவரை 50 சதவீதம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து வருகிறோம். ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருதால், இனி 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

 

இதுவரை திரையரங்குகளுக்கு சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை. ஏற்படவும் இல்லை. இதற்கு காரணம் திரையரங்குகளில் அரசு உத்தரவுப்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் செயல்படுத்தி வருகிறோம். 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துவோம்.

 

தற்போதுள்ள சூழ்நிலையில் 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியுடன் 8 சதவீதம் உள்ளாட்சி வரி சேரும்போது வரி பலுவினால் திரையரங்குகள் நடத்த முடியாத சூழ்நிலையும், பொதுமக்கள் வருவதற்கு 8 சதவீதம் வரி உயர்வை நீக்கினால் மக்கள் வருகை அதிகரிக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது ஒரு ஆண்டாக உள்ளதை மூன்று ஆண்டுகளாக மாற்றித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

புதிய திரையரங்குகளுக்கும் ஏற்கனவே உள்ள திரையரங்குகளுகளை சிறிய திரையரங்குகளாக மாற்றுவதற்கும், பொதுப்பணித்துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று அரசு ஆணையாக பிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால் பழைய ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருமை மிகவும் குறைந்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் சினிமா தியேட்டர்களுக்கு கொரோனாவினால் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தது. இந்த கொரோனா பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க அந்த அரசுகள் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

 

ரூ.10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்று அறிவித்துள்ளது. தியேட்டர்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது. நகரங்கள், புற நகரங்களில் உள்ள தியேட்டர்களூக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவியும், கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு இந்த கடன்களுக்கு வட்டி இல்லை என்று அறிவித்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசு நமது மாநிலத்தில் உள்ள தியேட்டர்களுக்கும் மேற்கண்ட்ட சலுகைகளை வழங்கிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் எம்.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், துணைத் தலைவர்கள் ராஜரத்தினம், ரமேஷ்பாபு, பொருளாளர் கே.வி.ஆர்.கஜேந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்.

Related News

7166

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

எம்.ஜி.ஆர் முகத்தை மறைக்கும் நம்பியார் முகம் ! - கவனம் ஈர்க்கும் ‘வா வாத்தியார்’ டீசர்
Wednesday November-13 2024

’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...

Children's Day special: Here are some of the best picks for the kids on JioCinema!
Wednesday November-13 2024

Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...

Recent Gallery