தமிழ் சினிமாவில் இளம் நடிகர், நடிகைகளின் திடீர் மரணம் தொடர்ந்துக் கொண்டிருப்பது ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், விஜய், நயன்தாரா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அருண் அலெக்சாண்டரின் திடீர் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல டப்பிங் கலைஞரான அருண் அலெக்சாண்டர், லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘கோலமாவு கோகிலா’, ‘கைதி’, ‘பிகில்’, ‘ஜடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘சவாரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அருண் அலெக்சாண்டருக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அருண் அலெக்சாண்டரின் இழப்பால் தமிழ் திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...