விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசனின், அவரசியல் பிரவேசத்திற்கு சினிமா திரையினர் பலர் நேரடியாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே நடிகர் விஷால், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் கமல் அரசியல்லுக்கு வருவதை வரவேற்போம், என்று கூறியுள்ள நிலையில், நடிகர் பிரசன்னாவும் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
‘துப்பறிவாளன்’ படம் தொடர்பாக இயக்குநர் மிஷ்கினுடன் தியேட்டர்களை நேரில் பார்வையிட்டு வரும் நடிகர் பிரசன்னா, கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், “துப்பறிவாளன் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. டிடெக்டிவ் சம்மந்தப்பட்ட கதை என்பதால், சில காவல்துறை அதிகாரி நண்பர்கள் உதவி செய்தார்கள். படத்தை பார்த்த சில அதிகாரிகள் பாராட்டவும் செய்தார்கள்.
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் சட்டவிரோதமாக படத்தை வெளியிடுபவர்கள் திருடர்கள். அவர்கள் மற்றவர்களின் உழைப்பை திருடி வாழ்கிறார்கள்.” என்று கூறியவரிடம், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிரசன்னா, “மக்களின் தலைவராக கமல்ஹாசன் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். தற்போது நடைமுறையில் உள்ள தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும். தற்போதைய அரசியல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லை. அரசு சார்ந்த எந்த துறையும் சரியாக இயங்கவில்லை. குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ துறையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் ஒரே போக்கில் செயல் படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது.” என்று கூறினார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...