தொலைக்காட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக சக நடிகர், நடிகைகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கிடையே, சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று அறிவித்த காவல் துறை, அவரை தற்கொலை தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தது. அதே சமயம், ஹேம்நாத்தின் தந்தை சித்ராவின் தற்கொலைக்கு அவர் வாங்கிய கடன் மற்றும் அவருக்கு வரும் மர்ம போன்கால்களும் காரணமாக இருக்கலாம், எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும், என்று கோரி போலீசில் புகார் அளித்தார்.
மேலும், சித்ராவை டிவி தொகுப்பாளர் ஒருவர் ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. அதேபோல், சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவிடம் உதவியாளராக பணியாற்றிய சலீம், என்பவர் அவரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள சித்ராவின் உதவியாளர் சலீம், ”தான் சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்காக தான் அவரை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பேன். இது அனைவருக்கும் தெரியும். அவர் படப்பிடிப்பு தளத்தில் செய்யும் டிக்டாக் உள்ளிட்ட விஷயங்களை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவேன். ஆனால், அதை மாற்றி நான் அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக ஹேம்நாத் கூறுகிறார்.
சித்ராவிடம் நான்கு மாதங்கள் உதவியாளராக இருந்தேன். அதன் பிறகு அவரை விட்டு வந்துவிட்டேன். அதற்கும் ஹேம்நாத் தான் காரணம். ஹேம்நாத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்ததும், சித்ரா ஹேம்நாத் சொல்வதை தான் கேட்டு வந்தார். அப்படி அவரை ஹேம்நாத் எதற்காகவோ லாக் செய்துள்ளார். ஹேம்நாத் இல்லாத போது அனைவரிடமும் நன்றாகப் பேசும் சித்ரா, ஹேம்நாத் இருந்தால் பேச மாட்டார், அந்த அளவுக்கு ஹேம்நாத் அவரை மிரட்டி வைத்திருந்தார்.
படப்பிடிப்பில் சித்ராவிடம் சண்டை போட்ட ஹேம்நாத், அதுபோல் பல முறை நடந்துக் கொண்டிருக்கிறார். சித்ரா முழுக்க முழுக்க ஹேம்நாத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...