நடிகர்களில் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்களில் ஆர்யாவும், விஷாலும் முக்கியமானவர்கள். “மச்சி” என்று ஒருவரையொருவர் அழைக்கும் அளவுக்கு நெருக்கமான இவர்கள் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தார்கள்.
இதற்கிடையே இரண்டாவது முறையாக ‘எனிமி’ என்ற படத்தில் ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடிக்கிறார்கள். இதில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. விஷாலும், ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டூப் இல்லாம் படமாக்கப்பட்டு வரும் சண்டைக்காட்சிகளில் நடித்த ஆர்யாவுக்கு கையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் ஆர்யா படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்தை ’அரிமா நம்பி’, இருமுகன்’, ’நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார்.
தனம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரவிவர்மா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...