அருண் விஜய் நடிப்பில், ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சினம்’. மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தை 2021 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு, முன்னதாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதற்காக சர்வதேச திரைப்பட விழாவுக்கென்று தனி ஒரு பதிப்பும் உருவாகி வருகிறது.
படத்தின் கரு உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டதால் தான், இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளார்களாம். மேலும், படத்தில் ஆக்ஷனும், உணர்வுகளும் சரிபாதியாக இருப்பதோடு, அவை படம் முழுவதுதையும் பரபரப்பாக நகர்த்தும் விதத்திலும் உள்ளதாம்.
அருண் விஜய் இப்படத்தில் பாரி வெங்கட் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க சில்வா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.
நவீன் இயக்கத்தில் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடித்து முடித்த அருண் விஜய், அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் ‘AV31’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதன் பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’...