சீரியல் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். சீரியல் படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு ஓய்வு விடுதிக்கு சென்றவர், அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறை சித்ரா, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தது.
இதற்கிடையே, சித்ரா தற்கொலை வழக்கை விசாரணை செய்த ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் அவரது கணவரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவின் நண்பர்கள் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர்கள் என மொத்தம் 16 பேரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சித்ராவின் விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று கூறும் அவரது தாய் விஜயா, சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், என்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். இதன் மூலம் சித்ராவின் தற்கொலை வழக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சித்ராவின் தாய் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சித்ராவின் தாய் முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தற்கொலை குறித்து மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’...