முன்னணி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்த சித்ரா, தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த தொடரில் தற்போது காவ்யா என்ற நடிகை நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் ஒருவராக ஜீவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வெங்கட் சுமார் 20 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டாராம்.
தற்போது பூரணமாக குணமடைந்திருக்கும் வெங்கட் விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...