பிரபல பத்திரிகையாளர்கள் கோடங்கி ஆபிரகாமும், ஒற்றன் துரையும், காரில் பயணித்துக் கொண்டே பலரை பதற வைப்பவர்கள். இவர்கள் கார் பயணத்தை தொடங்கினாலே பலருக்கு பதட்ட நிலைக்கு சென்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு உண்மை செய்திகளை உரக்க சொல்வதில் வல்லமை படைத்தவர்கள்.
ஊடகத்துறையில் ஒன்றாக பயணித்த இவர்களது பயணம், தற்போது திரைத்துறையிலும் தொடர உள்ளது. அதன் முதல்படியாக இவர்களது கூட்டணியில் குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது.
‘மலர்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இக்குறும்படம், சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார், என்பதை பற்றி பேசுகிறது.
கயல்விழி என்ற புதுமுக நடிகை ’மலர்’ குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு ’திடீர் தளபதி’ சதீஷ் முத்து, ஜோயல், ஹிதயத்துல்லா, ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
‘மலர்’ குறும்படத்தின் டைடில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட, புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், கோடங்கி ஆபிரகாம், ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘மலர்’ குறும்படத்தை இயக்கியிருக்கும் கோடங்கி ஆபிரகாம், ஏற்கனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆவணபடத்தை இயக்கியுள்ளார்.
அனீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த குறும்படத்திற்கு விசு இசையமைத்திருக்கிறார். யுவராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
ருச்சி சினிமாஸ் மற்றும் பாஸ்ட் மெஸெஞ்சர் இணைந்து வழங்க, பி.சுமித்ரா தயாரித்திருக்கும் ‘மலர்’ குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...