’காதல் ரோஜாவே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா குமார், அப்படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, கமல்ஹாசனையும், பூஜா குமாரையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது. மேலும், கமல்ஹாசனின் குடும்ப புகைப்படம் ஒன்றில் பூஜா குமாரும் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியதும் பூஜா குமார் காணாமல் போய்விட்டார்.
இந்த நிலையில், பூஜா குமார் திருமணமாகி, பெண் குழந்தைக்கு தாயாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பூஜா குமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலையும், புகைப்படத்தையும் பூஜா குமாரின் கணவர் வெளியிட, அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...