Latest News :

தயாரிப்பாளரான இசையமைப்பாளர் டி.இமான்! - முதல் தயாரிப்பு என்ன தெரியுமா?
Saturday January-02 2021

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். டிஐ புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள டி.இமான், இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில் ஆன்மீக இசை ஆல்பத்தை தயாரிக்கிறார்.

 

இது குறித்து இசையமைப்பாளட் டி.இமான் கூறுகையில், “இசையமைப்பாளராக எனது வெற்றிப்பயணம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலும், ஆதரவாலும் நிகழ்ந்தது. அவர்கள் தான் என் வெற்றியின் பெரும் தூண்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, தொடரும் எனும் நம்பிக்கையில் தான்  ’DI Productions’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக ’தேங்க் யூ ஜீஸஸ்’ ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. 8 பாடல்கள் கொண்டிருக்கும் இந்த ஆல்பம் முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த ஆல்பத்தில் ஆடியோ பங்குதாரராக இணைந்திருக்கும் Divo Music நிறுவனத்தாருக்கு எனது நன்றி. விரைவில் திரை இசை அல்லாத, சுயாதீன ஆல்பங்களை தயாரிக்கவுள்ளோம். அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.” என்றார்.

Related News

7183

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...