தென்னிந்திய திரை கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தமிழ் சினிமாவுக்கான விருதுகளில், பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் அஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகராக ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுக்கு ‘ராட்சசி’ படத்திற்காக ஜோதிகா தேர்வாகியுள்ளார்.
சிறந்த இயக்குநர் விருதுக்கு ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படத்திற்காக ஆர்.பார்த்திபனும், சிறந்த படமாக ‘டூ லெட்’, சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி சினிமாவை சேர்ந்த கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...