தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வந்தாலும், முந்தைய சீசன்களைப் போல் நிகழ்ச்சியில் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டுவதற்காக தயாரிப்பு தரப்பு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே போட்டியாளர்களில் மூத்தவர்களை வெளியேற்றிய நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பு, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட சில யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாக பாலாஜி, ஷிவாணி இடையே காதல், அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷிவாணியின் அம்மா அவரை தாறுமாறாக திட்டுவது போன்ற டிராமாக்கள் அரங்கேற தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஷிவாணி, பாலாஜி காதல் விவகாரத்தில் தலையிட்ட ஆரியை பாலாஜி அடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய எப்பிசோட்டில் பாலாஜியிடம் ஆரி அடி வாங்குவாரா, இல்லையா என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதோ அந்த புரோமோ,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...