தமிழ் பிக் பாஸ் சீசன் 4 தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ளது. தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், நிகழ்ச்சி இன்னும் 10 நாட்கள் மட்டுமே தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, இறுதிச் சுற்றுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு 100 வது நாளில் போட்டி முடிவடைய உள்ளது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி, ஷிவாணி காதல் விவகாரம் குறித்து பேசிய ஆரி மீது பெரும் கோபமடைந்த பாலா, அவரை அடிக்காத குறையாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, “வெளியே இருந்தா நான் கொடுக்கும் மரியாதை வேறு” என்று அவரை மிரட்டவும் செய்தார்.
பாலாவின் இத்தகைய நடவடிக்கையால் அவருக்கு எதிர்ப்பு வலுத்திருப்பதோடு, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும், என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரகசிய அறையில் வைத்து பாலாவை கமல்ஹாசன் இன்று விசாரிக்கிறார். விசாரணை முடிவில் அவரை அப்படியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆஜித் நேற்று வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...