விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மக்களின் பேவரைட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்த சித்ரா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் கதாப்பாத்திரங்களிலேயே சித்ராவின் முல்லை கதாப்பாத்திரம் தான் பேவரைட்டாக இருந்தது. சித்ராவின் திடீர் மறைவால் சற்று தடுமாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழு தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் காவ்யா என்ற நடிகையை நடிக்க வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் வரும் பொங்கல் பண்டியுடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இடம்பெறும் குடும்பங்கள் ஒன்றாக இணைவதால் தொடர் முடிவடைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான தொடராக இருக்கும் ‘பாண்டியன்ஸ் டோர்ஸ்’ தொடரை திடீரென்று நிறுத்துவதற்கும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், சீரியல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்றும் கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...