‘விவேகம்’ படத்தையடுத்து அஜித் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஷங்கர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானாது. மேலும், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரும் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட அஜித், குறைந்தது 4 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, புதிய படத்தின் பணிகளிளை அடுத்த ஆண்டு தொடங்க முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றி அஜித் படத்தை தயாரிக்க முன்வந்ததை தொடர்ந்து, நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்துள்ள அஜித், படத்தின் பணிகளை உடனடியாக தொடங்கவும் உத்தரவிட்டுள்ளாராம். இதையடுத்து சிவா ஒரு கதையை அஜித்திடம் சொல்ல, அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டாராம்.
தற்போது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் மும்முரம் காட்டி வரும் இயக்குநர் சிவா, அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் அஜித் படத்திற்கான லொக்கேஷன் தேர்வு மற்றும் திரைக்கதை வடிவமைத்தல் பணிகளில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் ஆரம்ப பணிகள் வேகமாக நடந்தாலும், படப்பிடிப்பு என்னவோ அடுத்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...