விதார்த் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஆற்றல்’. இப்படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க, ஹீரோயினாக ஸ்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் சார்லி, வையாபுரி, விக்கி உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க கார் ஒன்றும் முக்கிய கதாப்பாத்திரமாக வலம் வருகிறதாம்.
ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும், டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்பதை பற்றி தான் இந்த படம் பேசுகிறது.
படம் முழுக்க ஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம், படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும். ஒரு கார் எப்படி நடித்திருக்க முடியும்? என்று கேட்பவர்களுக்கு, படம் பார்க்கும் போது வியப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும், என்கிறார் இயக்குநர் கே.எல்.கண்ணன்.
செவ்வந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, விவேகா பாடல்கள் எழுதுகிறார். வீரசமர் கலையை நிர்மாணிக்கிறார். மக்கள் தொடர்பு பணியை குணா கவனிக்கிறார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...