Latest News :

சித்ராவுக்கு இருந்த மிக மோசமான பழக்கம்! - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Tuesday January-05 2021

தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான சித்ரா, கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். இவரது மரணத்தில் பல மர்மமங்கள் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேம்நாத் தான், என்றும் சித்ராவி தாயார் குற்றம் சாட்டினார்.

 

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதே சமயம், சித்ராவுக்கு அரசியல்வாதி ஒருவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், அவர் சிலர் காதலித்ததாகவும், குற்றம் சாட்டிய சித்ராவின் மாமனார், சித்ராவின் அம்மாவுக்கு அனைத்தும் தெரியும், இருப்பினும், அதை மறைக்க பார்க்கிறார், என்று கூறியதோடு, சித்ரா தற்கொலை விவகாரத்தில் உண்மை நிலை தெரிய வேண்டும், என்று கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இப்படி சித்ரா தற்கொலை வழக்கில் உண்மை நிலை தெரியாமல் இருக்கும் நிலையில், சித்ராவை பற்றி திடுக்கிடும் பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

சித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தையும், அதை சிகரெட்டில் லோடு செய்யும் கருவியையும் கண்டெடுத்தனர். இதனால் சித்ராவுக்கு குடிப்பழக்கத்துடன் சேர்ந்து கஞ்சா பழக்கமும் இருப்பதாக தெரிகிறது.

 

அதே சமயம், சித்ராவுக்கு இதுபோன்ற போதை பழக்கங்கள் இருந்ததா அல்லது வழக்கை திசை திருப்ப வேறு யாராவது இப்படி செய்தார்களா, என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

இருப்பினும், சித்ரா ஹேண்ட் பேக்கில் கண்டெடுக்கப்பட்ட இந்த போதைப் பொருட்களால் சித்ராவின் வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related News

7193

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery