சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் தொடர்பாக வெளியாகும் தகவல்களும், ரகசியங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்ட நிலையில், சித்ராவை அரசியல்வாதி ஒருவர் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், சித்ராவுக்கு ஏற்கனவே மூன்று பேருடன் காதல் இருந்து, கல்யாணம் வரை சென்றதாகவும் ஹேம்நாத்தின் தந்தை குற்றம் சாட்டியதோடு, சித்ரா மரணம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும், என்று வலியுறுத்தி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சித்ரா தற்கொலை தொடர்பாக காவல் துறை மற்றும் ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ என இரு தரப்பினரும் விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், சித்ராவின் தாய், சித்ராவின் தற்கொலை வழக்கு சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என்று கூறி, முதல்வர் நேரடி பிரிவில் புகார் ஒன்றையும் அளித்தார்.
சித்ரா தற்கொலை வழக்கு இப்படி முடிவு இல்லாமல் அவ்வபோது பல சந்தேகங்களை எழுப்பியவாறு பயணித்த நிலையில், சமீபத்தில் சித்ரா ஹேண்ட் பேக்கை சோதனையிட்ட போலீஸார் அதில், கஞ்சா மற்றும் அதை லோட் செய்யும் கருவி அதில் இருந்ததாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, சித்ராவுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹேண்ட் பேக் விஷயத்தால் சித்ராவுக்கு கஞ்சா பழக்கமும் இருப்பதாக கூறப்பட்டது. அதே சமயம், வழக்கை திசை திருப்ப, சித்ராவின் ஹேண்ட்பேக்கில் வேறு யாராவது அதை வைத்தார்களா, என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியான சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை, போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
ஆனால், இது சித்ரா தற்கொலை வழக்குக்காக இல்லை. ஹேம்நாத், பலரிடம் மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்துள்ளாராம். அவரால் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸில் புகார் அளிக்க, அந்த புகாரின் அடிப்படையில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...