தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 90 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்பவர்களை தேர்வு செய்யும் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ரியோ அதிக புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்க்கும் போது, எப்போதும் போல ஆரி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பாலா, ரியோ, கேப்ரில்லா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள்.
கடைசி இரண்டு இடங்களில் ரம்யா மற்றும் ஷிவாணி உள்ளனர். எனவே இவர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதால், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியேறலாம். அதே சமயம், ஒரு போட்டியாளரை மட்டும் வெளியேற்றினால், மிக குறைவான வாக்குகள் பெற்ற ஷிவாணி வெளியேற்றப்படுவார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...