சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ’தொடரி’ மற்றும் ‘பட்டாசு’ ஆகியப் படங்களில் நடித்திருக்கும் தனுஷ் மூன்றாவது முறையாக அந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கிறார். தனுஷின் 43 வது படமாக உருவாகும் இப்படத்தை ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’, ‘நரகாசுரன்’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, ஸ்முருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுவதோடு, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையோடு தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...