கொரோனா பாதிப்பால் சுமார் 8 மாதங்கள் மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், சில தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில் தயக்கம் காட்டுவதோடு, ஒடிடி-யில் நேரடியாக வெளியிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, சன் தொலைக்காட்சி சில திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே ஒளிபரப்பு செய்யவும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி ஆகியோரது நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிட்டு, ஜனவரி 15 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், படத்தின் இறுதிப்பணிகள் முடிய காலதாமதம் ஏற்பட்டதால், தற்போது நேரடியாக சன் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...