Latest News :

பிக் பாஸ் இறுதிப் போட்டி! - டாஸ்க்கில் வென்று நுழைந்தவர் இவர் தான்
Saturday January-09 2021

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், தற்போது டிக்கெட் டூ பைனலுக்கான டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

 

மொத்தம் 8 டாஸ்க்குகளில் இதுவரை 7 டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில், இதில் அதிக புள்ளிகளை பெற்றவர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்கள்.

 

இந்த நிலையில், இதுவரை முடிவடைந்த 7 டாஸ்க்குகளில் சோம் சேகர் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார். அதாவது அவர் 39 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். மேலும், ரியோ, ஷிவாணி, ரம்யா, ஆரி ஆகியோர் சோம் சேகரை விட குறைவான புள்ளிகள் பெற்றிருப்பதோடு, எஞ்சிய ஒரு டாஸ்க்கில் அவர்கள் அதிகமான புள்ளிகள் பெற்றாலும் சோம் சேகரை முந்த முடியாத நிலையில் இருந்தார்கள்.

 

இந்த நிலையில், அனைத்து டாஸ்க்குகளும் முடிவடைந்து மதிப்பெண்கள் அடிப்படையில் டிக் டூ பைனல் வெற்றியாளர் யார்? என்பதை கமல்ஹாசன் இன்று அறிவித்து விட்டார். அதன்படி, கோல்டன் டிக்கெட்டை சோம் சேகர் வென்று இறுதி சுற்றுக்குள் நுழைந்து விட்டார். அதே சமயம், இறுதி சுற்றுக்கு முன்பாக ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். 

 

Som Sekar

 

முன்பாக இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், ஷிவாணி மற்றும் ரம்யா பாண்டியன் தான் அந்த இருவர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இன்று வெளியான புரோமோவில் இந்தா வாரம் ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்பட இருக்கிறார், என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அந்த ஒரு போட்டியாளர் ஷிவாணியாக தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

 

Related News

7205

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...