கமர்ஷியல் படங்கள் மட்டும் இன்றி கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற நாயகியாகவும் வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனது கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘டிரைவர் ஜமுனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கும் இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ்.பி.செளத்ரி மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
கிரைம் த்ரில்லர் ஜானர் வகை திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகை தேர்வும் நடைபெற்று வருகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...