விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் ‘மாஸ்டர்’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் சாதனையை ரிலீஸுக்கு முன்பாகவே ‘மாஸ்டர்’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, அமெரிக்காவில் ‘மாஸ்டர்’ படத்தின் முன் பதிவில் மட்டும் இதுவரை ரூ.50 லட்சம் வசூல் ஆகியுள்ளதாம். இந்த தொகை, அமெரிக்காவில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை விட அதிகம் என்பதால், அஜித்தின் சாதனையை தனது படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே விஜய் முறியடித்துள்ளார்.
விஜயின் இந்த சாதனையை கொண்டாடி வரும் ரசிகர்கள், தளபதி தான் எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் கிங், என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...