தமிழ் பிக் பாஸ் சீசன் 4 இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜி, ஆரி, ரியோ, சோம் சேகர், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா ஆகிய 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சோம் சேகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், மீதமுள்ள 5 பேரில் இரண்டு பேர் இறுதி போட்டிக்குள் நுழைய இருக்கிறார்கள். அந்த இரண்டு பேர் யார்? என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இறுதி சுற்று மற்றும் பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. அதற்காக போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் மூலம் தற்போதைய போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய எப்பிசோட்டில் டாஸ்க் ஒன்று பற்றி கேப்ரில்லா போட்டியாளர்களிடம் விளக்கி கூறிவிட்டு, ஆரியிடம் “ஓகேவா பிரதர்” என்று கேட்க, ஆரி அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். கேப்ரில்லா திரும்ப திரும்ப ஆரியிடம் கேட்டும் அவர் மவுனமாக இருக்க, அதைப் பார்த்து கோபமடைந்த ரியோ, கேப்ரில்லாவுக்கு வக்காளத்து வாங்குகிறார்.
உடனே கோபமடையும் ஆரி, ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல இருவரும் முறைக்கவும் செய்கிறார்கள்.
பிறகு எப்போதும் போல இருவரும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சமாதானம் ஆனாலும், இன்றைய எப்பிசோட்டில் இவர்களுடைய இந்த திடீர் மோதல் புது சர்ச்சையை பிக் பாஸ் வீட்டில் ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...