தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என்று சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ரஹ்மான், 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்ததோடு, பல மாறுபட்ட கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர். தற்போதும் தொடர்ந்து பல கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர், ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இன்னமும் இளமையான தோற்றத்தோடு இருக்கும் ரஹ்மான் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தில் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விரைவில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைய உள்ளார்.
புத்தாண்டில் புதிய உற்சாகத்தோடு பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் ரஹ்மான், இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், அறிமுக இயக்குநர் சார்ல்ஸ் ஜோசபின் இயக்கும் ’சமரா’ என்ற மலையாளப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோவாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பவர், அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ஜெயம் ரவி ஆகியோருடன் ‘ஜன கன மன’, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களிலும் நடித்து வருபவர், ஒரே வருடத்தில் அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...