தமிழக மற்றும் இந்திய அரசியலையும், மாநில மற்றும் மத்திய அரசையும், அவர்களின் மக்களுக்கு எதிரான திட்டங்களையும், சட்டங்களையும் விமர்சிக்கும் சினிமா பிரபலங்களில் இயக்குநர் அமீரும் ஒருவர். நிஜத்தில் விமர்சித்து வந்தவர், ’நாற்காலி’ திரைப்படம் மூலம் திரையிலும் விமர்சிக்க உள்ளார்.
‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கும் அரசியல் திரைப்படமான ‘நாற்காலி’-யில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கிறார். ‘வட சென்னை’ திரைப்படம் மூலம் நடிகராக ரசிகர்களை கவர்ந்த அமீர், இந்த நாற்காலி மூலம் அரசியல்வாதியாக அசத்தப்போகிறார்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, சரவண ஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளார். அஜயன் பாலா மற்றும் க.முரளி வசனம் எழுத, ஏ.கே.முத்து கலையை நிர்மாணித்துள்ளார். டான் அசோக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கே.எஸ்.கே.செல்வா மக்கள் தொடர்பாளர் பணியை கவனிக்கிறார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற பாடலை பாடியிருக்கிறார்.
மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...