தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ”உலகம் முழுவதும் பரவியிருக்கும் என் அன்பு தமிழர்கள் மற்றும் திரையுலகத்தினருக்கு இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
பல இன்னல்களை எதிர்கொண்டு வரும் உழவுத்தொழிலும், உழவுத்தொழிலாளர்களும் இந்த தைப்பொங்கலில் புதிய உற்சாகமும், ஆற்றலும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
விவசாய குடும்பத்தில் பிறந்த நான் தற்போது நடிகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், என்னை மக்களுக்கு அடையாளம் காட்டிய ‘களவாணி 2’ படத்தில் விவசாயியாக நடித்ததை எண்ணி என்றும் பெருமைக்கொள்வேன்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் விஜயின் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய திரைப்படங்களின் வெற்றியின் மூலம் திரைத்துறையும், திரையரங்க தொழிலும் மீண்டும் வீறுபெற்று வெற்றிநடை போடவும் வாழ்த்துகிறேன்.
இந்த தைப்பொங்கல் நன்நாளில் அன்பு, ஆற்றல், இன்பம், ஈகை, ஏற்றம். ஒற்றுமை, மகிழ்ச்சி, செல்வம் என அனைத்தும் நம் வாழ்வில் இன்பமாய் பொங்கிட இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘களவாணி 2’ படத்தை தொடர்ந்து ‘டேனி’, ‘க.பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...