தமிழ் பிக் பாஸ் சீசன் 4 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. தற்போது பழைய போட்டியாளர்கள் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்திருப்பதோடு, தற்போதைய போட்டியாளர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். வரும் ஜனவரி 17 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று நடைபெற உள்ளது.
இந்த இறுதிச் சுற்றில் வெற்றிப் பெறப்போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் ஆரி இருக்கிறார். இதனால், ஆரி தான் சீசன் 4 பிக் பாஸின் வெற்றியாளராக வருவார், என்று பலரால் கூறப்படுகிறது.
அதே சமயம், ரசிகர்களின் வாக்குகளை மட்டுமே வைத்து பிக் பாஸில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பு, ஸ்பான்சர்கள் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் வெற்றியாரை நிர்ணயிக்க கூடிய இடத்தில் இருப்பதால், வெற்றியாளர் விஷயத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட பல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்து, விருப்பம் உள்ளவர்கள் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கொடுக்கப்படும். கடந்த சீசனில் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான கவின், ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.
தற்போது, அதே வாய்ப்பு போட்டியாளர்களுக்கு வழங்க, ரம்யா பாண்டியன் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
காரணம், தற்போதைய பிக் பாஸில் வெற்றியாளராக ஆரி தான் வருவார் என்று பெரும்பாலனவர்களுக்கு கருத்து கூறி வருகிறார்கள். அப்படி ஆரி இல்லை என்றால் பாலாஜி அல்லது சோம்சேகர் ஆகியோரில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்கள் வெற்றியாளராக ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் ரம்யா பாண்டியன் கிடைக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே சமயம், இதன் உண்மை நிலை நாளை அல்லது சனிக்கிழமை தெரிந்துவிடும்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...