பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. நான்கு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகி திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆரி வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவருக்கு தான் பார்வையாளர்கள் வாக்குகள் அதிகம் கிடைத்து வருகிறது. இருப்பினும், இறுதி சுற்றில் சில எதிர்ப்பாராத மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், ஆரிக்கு பிக் பாஸ் மூலம் புதிய பெருமை கிடைத்துள்ளது. அதாவது, தமிழ் மட்டும் இன்றி பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளர் யார்? என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், ஆரிக்கு 5 வது இடம் கிடைத்துள்ளது. முதல் நான்கு இடங்களை வேறு மொழியில் ஒளிபரப்பாகும் பிக் போட்டியாளர்கள் கைப்பற்றியிருந்தாலும், டாப் 5 லிஸ்ட்டில் தமிழ் பிக் பாஸ் போட்டியாளர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். எனவே, தமிழ் பிக் பாஸ் போட்டியாளர்களில் இந்திய அளவிலான கணக்கெடுப்பில் ஆரி டாப் 5 லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பது அவருக்கு மட்டும் இன்றி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே பெருமை.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...