தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ள சூரி, விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநரிகளில் ஒருவராக உள்ள வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருவதாகவும் கூறபப்டுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘க/பெ.ரணசிங்கம்’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கை வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக பவானி ஸ்ரீ அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...