Latest News :

விஜய் சேதுபதி நடிக்கும் மவுனப்படம் ‘காந்தி டாக்ஸ்’
Sunday January-17 2021

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, ஹீரோவாக நடிப்பது மட்டும் இன்றி வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர், தமிழ்ப் படங்களுடன் பிற மொழித்திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், பாலிவுட்டில் உருவாகும் மவுனப்படம் ஒன்றில் முதன்மை கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

 

‘காந்தி டாக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார். இப்படம் சுமார் 33 வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் உருவாகும் மவுனப்படம் இதுவாகும்.

 

இப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் கூறுகையில், “இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர் தான். தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.

 

ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.

 

அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோட பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்.” என்றார்.

 

திவய் தமிஜா க்ரியேட்டிவ் தயாரிக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்துடன், ’அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம், சந்தோஷ் சிவன் இயக்கும் 'மும்பைக்கர்', ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸ் என பல பாலிவுட் திரைப்படங்களில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7223

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery