கதாநாயகனாக மட்டும் இன்றி அழுத்தமான குணச்சித்திர வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் கலையரசனும் ஒருவர். ‘மெட்ராஸ்’ படம் மூலம் தனது நடிப்பு திறனை நிரூபித்தவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு, பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சிம்பு, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படத்தில் கலையரசன் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே, பிரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருவதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கலையரசனின் கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா கூறுகையில், “மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார் கலையரசன். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரம் ஆகும். பிரபல நடிகராகவும், முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் உள்ளவரை நடிக்க வைக்க நினைத்தேன். கலையரசனை அணுகும்போது முதலில் இப்படத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.” என்றார்.
ஸ்டுடியோ க்ரீன் பிலிம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோடைக்காலத்தில் தொடங்க உள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...