மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ‘தலைவி’. விஜய் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.
மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘தலைவி’ படக்குழு எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு சிறப்பு செய்துள்ளது. எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக எம்.ஜி.ஆர் பற்றியும், அவரது சிறப்புகள் பற்றியும் வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ‘தலைவி’ படக்குழு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத் மற்றும் அரவிந்த்சாமி இணைந்திருக்கும் ‘தலைவி’ திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
விஷுவல்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக, ரசிகர்களின் விருப்ப நாயகர்களாக, கோலோச்சிய காலத்தை மீண்டும் மீளுருவாக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதாக உள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தினை விஷ்ணு வர்தன் இந்தூரி, சய்லேஷ் ஆர்.சிங் Vibri Media நிறுவனம் மற்றும் Karma Media நிறுவனம் சார்பில் Gothic Entertainment மற்றும் Sprint Films உடன் இணைந்து தயாரித்துள்ளனர். கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பிரசாத், இணை தயாரிப்பு ஹிதேஷ் தக்கர், திருமால் ரெட்டி.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...