ரேகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்ரவர்த்தி தயாரித்திருக்கும் படம் ‘வெட்டி பசங்க’. நடன இயக்குநர் மாஸ்டர் மஸ்தான் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு வி.தஷி இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், வாராகி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசி பழனிவேல், இசையமைப்பாளர் அம்ரிஷ், நடிகர்கள் மஹேந்திரன், போஸ் வெங்கட், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
இசை குறுந்தகடை வெளியிட்டு பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி, ”தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், “‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயல் வடிவில் செய்தால் தான் அப்படம் வெற்றியடையும்.” என்றார்.
கவிஞர் சினேகன் பேசுகையில், “மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றிருக்கிறது. ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப்படுகிறது. ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள்.” என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், “இப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.சிறிய படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அதைவிட திரையரங்குகளின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் சிறிய படங்கள் வெற்றியடையும்.” என்றார்.
தயாரிப்பாளர் சக்ரவர்த்தி, இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னதாக, ‘வெட்டி பசங்க’ படக்குழு சார்பில், மறைந்த மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான நெல்லை பாரதியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...