நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக தற்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் ஜே.எஸ்.என்.மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிழ்ச்சை நிபுணர் மருத்துவர்.மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார்.
அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...