Latest News :

நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்
Tuesday January-19 2021

‘அன்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பாலா, அப்படத்தை தொடர்ந்து ‘காதல் கிசுகிசு’, ‘மஞ்சள் வெயில்’, ‘அம்மா அப்பா செல்லம்’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் ஹீரோ அவதாரம் எடுத்த பாலா, தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. 

 

ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

 

தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும்  ஜனவரி 24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார்.

 

இந்த கவுரவ டாக்டர் பட்டம் என்னவோ போகிற போக்கில் பாலாவுக்கு கொடுக்கப்பட்டுவிடவில்லை. அவர் தொடர்ந்து மனிதாபிமானத்துடன் மேற்கொண்டு வரும் சமூக சேவை செயல்பாடுகளை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாக கவனித்து, அவற்றை கணக்கில் கொண்டே, இந்த டாக்டர் பட்டத்திற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம். 

 

ஆம், பாலாவை பொருத்தவரை பலருக்கும் ஒரு நடிகராகத்தான் தெரியும்.. ஆனால் கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது ‘நடிகர் பாலா தொண்டு நிறுவனம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார்.

 

Actor Bala

 

குறிப்பாக கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துக்கொண்ட பாலா, அந்த குடும்பங்களின் ஒவ்வொரு தேவையையையும் பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்து வருகிறார். 

 

அடித்தட்டு மாணவர்களுக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல், வீடு கட்டிக் கொடுத்தல், மருத்துவ உதவிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு மிக உயர்ந்த கட்டண செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்வது என நடிகர் பாலா செய்துவரும் உதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

 

இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி நடிகர் பாலா கூறும்போது, “யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது. இந்த வயதில் நாலு பேருக்கு நம்மால் நல்லது பண்ண முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன். முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும். மேலும் இதை பார்க்கும்போது இதுபோன்று மனிதாபிமானத்துடன் உதவி செய்ய நினைக்கும் பலருக்கும் இது உத்வேகம் தருவதாக இருக்கும்.” என்றார்.

 

இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7233

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery