Latest News :

அடிமேல் அடி! - அதிர்ச்சியில் ‘ஈஸ்வரன்’ படக்குழு
Thursday January-21 2021

நடிகர் சிம்பு தன் மீது இருந்த தவறான பார்வையை அகற்றி புதிய அவதாரம் எடுத்து, தான் நடிக்கும் படங்களில் படப்பிடிப்புகளை விரைவாக முடித்துக் கொடுக்கிறார். அந்த வகையில், மிக குறுகிய காலத்தில் சிம்பு முடித்த படம் தான் ‘ஈஸ்வரன்’. சுசீந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க, இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 

இப்படம் பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது அளித்த புகார் குறித்து விசாரணை நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம், சிம்பு மைக்கேல் ராயப்பனுக்கு இழப்பீடு கொடுத்தால் தான் ‘ஈஸ்வரன்’ ரிலீஸாக முடியும், என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பலக்கட்ட பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு படம் வெளியானது.

 

இதற்கிடையே, விஜயின் மாஸ்டர் படத்தை திரையிட ஆர்வம் காட்டிய திரையரங்க உரிமையாளர்கள் ‘ஈஸ்வரன்’ படத்திற்கு திரையரங்குகளை ஒதுக்க தயக்கம் காட்டினார்கள். இதனால், எதிர்ப்பார்த்த அளவுக்கு திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்றாலும், ரிலீஸ் குறித்து அறிவித்துவிட்டதால், கிடைத்த திரையரங்குகளில் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆனாது.

 

அனைவரும் எதிர்ப்பார்த்தது போல, ஈஸ்வரன் சுமாருக்கும் கீழ் என்ற விமர்சனத்தோடு, படு சுமாரான வசூலைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விற்பதற்கும் நடவடிக்கையில் இறங்கிய படக்குழுவினர், முன்னணி சேனல் ஒன்றை அனுகியபோது, அவர்கள் என்ன விலை? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு படக்குழு ரூ.10 கோடி விலை சொல்ல, அவர்கள் மேலிடத்தில் பேசிவிட்டு சொல்கிறோம், என்று கூறியிருக்கிறார்கள்.

 

அதன் பிறகு தொலைக்காட்சி தரப்பை தொடர்பு கொண்ட ஈஸ்வரன் படக்குழுவுக்கு பெருத்த ஏமாற்றம். காரணம், தொலைக்காட்சி தரப்பு ஈஸ்வரன் படக்குழுவின் தொலைபேசி அழைப்பையே நிராகரித்து வந்ததாம். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி மேலாதிரிகாரியை பிடித்த ஈஸ்வரன் படக்குழு, விலை குறித்து கேட்க, ரூ.1 கோடி என்றால் வாங்கலாம், என்று மேலிடம் சொன்னதாக தெரிய, அதிர்ச்சியில் உரைந்த ஈஸ்வரன் படக்குழு, இன்னும் அதில் இருந்து மீளவில்லையாம்.

 

Related News

7235

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery