சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் பல மர்மங்கள் தொடர்ந்து நீடித்து வருவதோடு, வழக்கு முற்றுபெறாமல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. சித்ராவின் மரணம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதால் தான் நிகழ்ந்துள்ளது, என்று போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருப்பதோடு, அவரை அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஜாமீன் கேட்டு மனி தாக்கல் செய்திருக்கும் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது, என்று சித்ராவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல், ஹேம்நாத்தின் 10 வருட நண்பர் என்று கூறி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையன் ரோஹித் என்பவரும், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது, என்று மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், சித்ரா தற்கொலைக்குப் பிறகு ஹேம்நாத் தன்னிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருப்பவர், ஹேம்நாத் பற்றி பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருபவர், அதில் ஹேம்நாத் சித்ராவை மிக கடுமையாக கொடுமை செய்து வந்ததாகவும் கூறி வருகிறார்.
இந்த நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவையும், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற எதிர் தரப்பு மனுவையும் விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்ய முடியாது. அந்த வகையில், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கூற சையம் ரோஹித்துக்கு அடிப்படை உரிமை இல்லை, என்று கூறி அவரது மனுவை தள்ளிபடி செய்துவிட்டனர்.
அதே சமயம், சித்ராவின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துரைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையும் கால அவகாசம் கேட்டுள்ளது.
இப்படி சித்ராவின் தற்கொலை வழக்கு நீண்டு கொண்டே போக, இதில் அவ்வபோது சில சர்ச்சையான தகவல்களும், மனிதர்களும் தொடர்பாகி வருகிறார்கள். அரசியல்வாதி மிரட்டல் என்று ஒரு தகவல் பரவி வர, தற்போது எங்கேயோ இருந்த சையம் ரோஹித் என்பவர், திடீரென்று தன்னை சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் நண்பர் என்று கூறி, பல சித்ரா, ஹேம்நாத் குறித்து பேசி வருவது புதிய சர்ச்சையை உருவாக்கி வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...