தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இதுவரை இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.
‘கலியுககம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்குகிறார். இவர் எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாத இவர், விளம்பரத் துறையில் பணியாற்றியதோடு, சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
ஹாரார் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி, பிரம்மாண்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.
முன்னோக்கிய கதைக்களம் என்பதால் கலை இயக்குநரின் பணி என்பது மிகவும் முக்கியமானது. இதற்காக பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இந்தப் படத்துக்கு அரங்குகளைப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் கலை இயக்குநர் என்.சக்தி வெங்கட் ராஜ். இந்த அரங்குகள் பார்வையாளர்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
புதுமையான கதைக்களம் கொண்ட இப்படத்தின் காட்சியமைப்புகள், திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும், என்கிறார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.
விரைவாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள ‘கலியுகம்’ படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்த உடன் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய உள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...