இந்திய திரையுலகினரால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி ஆகியோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த ஆண்டு அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனடி, ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியான திரைப்படங்கள் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ’சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.
இந்த பொதுப்பிரிவுப் போட்டியில் ’சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் இராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ’சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...